நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா ? ஜெயக்குமார் சொன்ன பகீர் தகவல்..!
ஈசிஆர் சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைப்பதை பொதுமக்களே விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டுக்கே கருணாநிதி பெயரை வைதத்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு போக்குதான் நிலவுகிறது. தமிழ்நாட்டிற்கு உதயநிதியும், சபரீசனும் நிழல் முதல்வர்களாக செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு உதயநிதியும், சபரீசனும் நிழல் முதல்வர்களாக செயல்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- ஈசிஆர் சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைப்பதை பொதுமக்களே விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டுக்கே கருணாநிதி பெயரை வைதத்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு போக்குதான் நிலவுகிறது. தமிழ்நாட்டிற்கு உதயநிதியும், சபரீசனும் நிழல் முதல்வர்களாக செயல்படுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை தடுக்க திமுக அரசு என்ன செய்து வருகிறது? மாணவர்கள் சண்டை, ஆசிரியர்களிடம் மாணவர்கள் சண்டையை தடுக்க பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது. மும்மொழி கொள்கையை திமுக நேரடியாக ஆதரிக்கும் நிலையில் தான் உள்ளது. திமுகவை போல ஒரு பச்சோந்தியை பார்க்க முடியாது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சித்ராவின் தற்கொலைக்கு முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு என கணவர் ஹேம்நாத்தின் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார்;- நடிகை சித்ராவின் மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. சிக்கும் அதிமுக முக்கிய பிரமுகர்? மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை.!