Asianet News TamilAsianet News Tamil

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. சிக்கும் அதிமுக முக்கிய பிரமுகர்? மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை.!

சித்ரா மரணத்துக்கு ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

VJ Chitra Death Case...Contact the former AIADMK MLA
Author
Chennai, First Published May 2, 2022, 9:57 AM IST

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் பின்னணி கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்த வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகை சித்ரா தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர்15-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

VJ Chitra Death Case...Contact the former AIADMK MLA

ஹேம்நாத் புகார்

இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்தார்.

VJ Chitra Death Case...Contact the former AIADMK MLA

 மாஃபியா கும்பல் 

சித்ரா மரணத்துக்கு ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்? அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்பி கிடைக்க மாட்டாள். தற்போது என் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன்.

VJ Chitra Death Case...Contact the former AIADMK MLA

உயிருக்கு ஆபத்து

மேலும், மரணத்திற்கு காரணமானவரிடம் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரிடம் பணம் பறிக்க முயல்வதாகவும் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என  மிரட்டுகின்றனர். மேலும் என்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால்  உயிருக்கு ஆபத்து ஏற்படும் என  அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயிர் வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும என ஹேம்நாத் கூறியுள்ளார்.

VJ Chitra Death Case...Contact the former AIADMK MLA

மீண்டும் விசாரணை

இதைத் தொடர்ந்து, நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய, மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். இவர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக விசாரிக்க உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios