In all parts of Tamil Nadu including Chennai Marina Jallikattu great arapporattam insisting that the ban was removed

புதிதாக தொடங்கப்பட்ட என் தேசம்..என் உரிமை கட்சியின் நிர்வாகிகள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மற்றும் எளிமையாக அவசியல்வாதி என பெயரெடுத்த நல்லகண்ணு ஆகியோரிடம் ஆலோசனை பெற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெரீனா உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தை மாணவர்களும், இளைஞர்களும் முன்னெடுத்துச் சென்றனர். இந்தப் போராட்டம் வெற்றியடைந்ததையடுத்து அவர்கள் மீது பொது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் நேற்று முன்தினம், சென்னையில் என் தேசம்..என் உரிமை என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் ணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதிய கட்சி தொடங்கியுள்ள ஜல்லிக்கட்டு இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறியுரைகள் வழங்கியுள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில், இளைஞர்கள் தொடங்கியுள்ள இந்த கட்சி வாவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இக்கட்சியில் போதுமான கட்டஅனம் இல்லாததால் பழுத்த அரசியல் அனுபவம் பெற்ற நல்லகண்ணு, நேர்மையான அரசு அதிகாரியான சகாயம் ஆகியோரிடம் ஆலோசனை பெற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.