வருமான வரித்துறையின் 5 நாட்கள் ரெய்டையும் ரொம்பவும் தெனாவெட்டாகத்தான் விவேக் எதிர்கொண்டதாகவும். விசாரணைக்காக வருமான வரித்துறை அலுவகத்துக்கு அடிக்கடி வர வேண்டும் என வேர்கள் கூறியபோது நீங்க சொல்லுங்க நான் ரெடியாத்தான் இருக்கேன் என்று கூலாக பதில் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 9 ஆம் தேதி ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் அதிரடியாக ரெய்டைத் தொடங்கிய வருமான வரித்துறையினர். தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடந்தாலும், இளவரசியின் மகன் விவேக் தொடர்புடைய ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ், மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீடு என விவேக்கைச் சுற்றியே இந்த ரெண்டு நடைபெற்றதாகவே கூறப்படுகிறது.

இச்சோதனையில் முதல் 3 நாட்கள்தான் முழுமையான சோதனை நடைபெற்றது என்றும். கடைசி 2 நாட்களும் விவேக்குக்கு உளவியல் ரீதியான டார்ச்சர்களை அவர்கள் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 5 நாட்கள் ரெய்டு முடிந்தபின்  “சில ஆவணங்களில் கையெழுத்துப் போடச் சொல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் கேட்டிருக்கிறார்கள். ஏன் மிரட்டிக் கூட பார்த்திருக்கிறார்கள்!

இன்னும் 4 நாள் என்ன 40 நாள் கூட ரெண்டு பண்ணுங்க… என்னை ஹவுஸ் அரெஸ்ட்கூட பண்ணுங்க… ஆனால் கையெழுத்து மட்டும் போட மாட்டேன் ஒரே போடாய் போட்டுள்ளார் விவேக். நீங்க விசாரணைக்குக் கூப்பிடுங்க… நான் வரேன். கணக்கு கேளுங்க...பதில் சொல்றேன். ஆதாரங்களைக் கொடுக்கிறேன். ஆனால் உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டிப்படைக்க முடியாத என அதிரடியாகவே பேசினாராம் விவேக். இந்த தகவல்கள் எல்லாம் உடனடியாக டெல்லிக்கு லைவ் ரிலேவும் செய்யப்பட்டுள்ளதாம்.

மிஸ்டர் விவேக், ரெய்டு முடிஞ்சு போச்சுன்னு நினைக்காதீங்க , இது தொடக்கம்தான் … நாங்களும் இங்க திரும்பி வருவோம்…நீங்களும் விசாணைக்கு அடிக்கடி வரணும் என்று சற்று காட்டமாவே ரெய்டு முடிந்து கிளம்பும்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு கூலாக பதில் அளித்த விவேக், ‘நீங்க சொல்லுங்க, நான் ரெடியாகத்தான் இருக்கேன்’ என சிரித்தபடியே சொல்லி அனுப்பியிருக்கிறார் விவேக்.

மேலும்  வருமான வரித்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியான சில வாக்குறுதிகளை விவேக்கிடம் பெற முயற்சி செய்ததாகவும், இதற்கெல்லாம் அஞ்சாத  விவேக், நான்  7-வது வகுப்பு  படிக்கும் போதே கார்டனில் ரெய்டு வந்தார்கள்..அப்போது சோபாவில் தூங்கி கொண்டிருப்பேன்.. நீங்கள்தான் எழுப்பிவிட்டு செல்வீர்கள் என கெத்தாக சொல்லியிருக்கிறார்.

அதேபோல் வீட்டில் இருந்த நகைகள் குறித்து அதிகாரிகள் துருவி துருவி கேட்டபோது இதெல்லாம் கல்யாணத்துக்கு மாமனார் வீட்டில் போட்ட நகைகள் சார்... நகை வாங்குனத்துக்கு எல்லாம் பக்கா ரசீது இருக்கு என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜாஸ் சினிமாஸ் விவகாரத்தில் வசமாக விவேக் சிக்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும் யாரும் எதிர்பார்க்காத சில வீடுகளில் முக்கிய ஆவணங்களை விவேக் பதுக்கி வைத்திருந்தது மன்னார்குடி உறவுகளுக்கே ஷாக்காக இருந்ததாம். இத்தனை களேபரத்துககும் இடையே  விவேக் மனைவி கீர்த்தனாதான் படு அப்செட் ஆகிவிட்டாராம். அவரை சமாதானப்படுத்துவதற்குள் விவேக் திண்டாடித்தான் போனாராம்.