Vivek is the next descendant of Sasikala family politics
சசிகலா, தினகரனுக்கு பிறகு, விவேக்தான் குடும்ப அரசியலில் அடுத்ததாக வலம் வருவார் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அதிமுகவில் கோலோச்சியது சசிகலாவின் குடும்பம். தினகரன் தொடங்கி அந்த பட்டியல் நீண்ட கொண்டே போகிறது.
.jpg)
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொது செயலாளரான சசிகலா, முதலமைச்சராகி கோட்டைக்குப் போக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அவருக்குப் பிறகு, ஆர்.கே.நகர் மூலமாக டிடிவி தினகரனும் முதலமைச்சர் கனவில் மிதந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். தற்போது அதிமுக
அம்மா அணியின் துணை பொது செயலாளராக தினகன் இருந்து வருகிறார். தற்போது அவர்களுக்கு அதிமுகவை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக உள்ளது.

டிடிவி தினகரனைத் தொடர்ந்து அதிமுக அம்மா அணியில் தம்மை முன்னிறுத்த சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தீவிர முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதற்காக அவர் பல்வேறு வகை பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அதாவது, ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற சிடி இருக்கிறது என்பது உள்ளிட்டவைகளை அவர் கொளுத்தி போட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில்தான், வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளானது சசிகலா குடும்பம். இந்த சோதனை விவேக்கை மையமாக வைத்துதான் நடந்ததாக கூறப்படுகிறது.

விவேக் வீட்டிலும், ஜெயா டிவியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளரான டி.டி.வி.தினகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பரோலில் வந்த சசிகலா, தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்
வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் ஆகியோர்களின் பெயர்களில் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரு தினங்களுக்க முன் விவேக், வருமான வரித்துறை அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தப்பின் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தாம் சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டு, செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

தற்போது மன்னார்குடி அரசியலில் விவேக்தான் எல்லாம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் விவேக்கின் கோஷ்டிகள், ஆனந்த கூத்தாடி வருவதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் ஜெய் ஆனந்த் ஒரு பதிவை போட்டுள்ளார். அரசியலுக்கு இத்தகைய சோதனைகள் அவசியம் என்று
ஜெய் ஆனந்த் பதிவிட்டிருந்தார்.
