Vishal and Deepa did not learn politics!
நடிகர் விஷால், தீபாவின் இன்னும் அரசியலில் பாலபாடம் கற்கவில்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஆர்.கே.நகரில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு கிண்டல் செய்யும் விதமாக ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று அந்த வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
தீபா, விஷால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் விஷால், தீபா நிராகரிக்கப்பட்டதற்கு, இன்னும் அவர்கள் அரசியல் பாலபாடம் கற்கவில்லை என்று தெரிகிறது என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
