கடந்த ஓர் ஆண்டாக திமுகவில்  ஒதுங்கி இருந்த விழுப்புரம் எலும்பு முறிவு மருத்துவரும், முன்னாள் திமுக மாவட்ட துணை செயலாளர் மருத்துவர் முத்தையன் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் திமுக மாவட்ட துணை செயலாளர் மருத்துவர் முத்தையன் போட்டியிட்டார்.இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரனிடம் 1,93,337 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்குப் பின், திமுகவின் கட்சி நடவடிக்கைகளில் ஒதுங்கி இருந்த முத்தையன், இரு தினங்களுக்கு முன் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது ஏற்பட்ட அதிருப்பதியின் காரணமாக லட்சுமணன் திமுகவில் இணைந்தார். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக மாவட்ட துணை செயலாளர் மருத்துவர் முத்தையன் தேர்தலில் சீட் என்ற நிபந்தனையோடு அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளளார். லட்சுமணன், முத்தையன் இருவரும் எலும்பு முறிவு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.