Asianet News TamilAsianet News Tamil

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.... உதயநிதி ஸ்டாலினுக்காக வேட்புமனு தாக்கல்..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்ப மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடியின் மகனான கவுதம்சிகாமணி எம்.பி. தனதுசொந்த செலவில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

vikravandi by-election...udhanidhi stalin Nominations
Author
Tamil Nadu, First Published Sep 23, 2019, 1:27 PM IST

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்ப மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடியின் மகனான கவுதம்சிகாமணி எம்.பி. தனதுசொந்த செலவில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

vikravandi by-election...udhanidhi stalin Nominations

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான நேர்காணல் செப்டமபர் 24-ம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதில், திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி ஜெயச்சந்திரன் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. vikravandi by-election...udhanidhi stalin Nominationsஇதனிடையே, திடீரென விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியின் மகனான எம்.பி. கவுதம்சிகாமணி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு முன் திருவாரூரில் நடந்த இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுக கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், வேலூர் தொகுதியில் நடந்த மக்களவை மறுதேர்தலிலும் உதயநிதியை களமிறக்க வேண்டும் என கழக உடன்பிறப்புகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios