நீண்ட முயற்ச்சிக்குப் பின்னர் விக்கரம் லேண்டர் தேடும் பணி கைவிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தொன்துருவத்தை ஆய்வு செய்வதற்காக  சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவியது. திட்டமிட்டபடி சுமார் 48 நாட்களில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடந்த 7 ஆம் தேதி அன்று நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்தது ,அதுவரை திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணித்த லேண்டர்  நிலவில் தரையிரங்குவதற்கு வெறும்  2 கிலோ மீட்டர் தூர உயரத்தில் இருந்த போது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் லேண்டரிடமிருந்து தகவல் தொடர்பு இல்லை என்று இஸ்ரோ அறிவித்தது, அதுவரை இந்திய வரலாற்று  சிறப்பு மிக்க லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை காண ஆர்வத்துடன் காத்திருந்தவர்கிளின்  நெஞ்சில் இடிவிழுந்தது,  இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்தது, இருந்தாலும் உலகமே இந்தியாவின் இம்முயற்ச்சியை வெகுவாக பாராட்டியது.

 

சந்திராயன் திட்டத்தில் இது சிறு சருக்கலாக கருதப்பட்டாலும், நிலவுக்கு நெருக்கமாக சுற்றிவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள ஆர்பிட்டரைக் கொண்டு  நிலவு ஆராய்ச்சியை 95 சதவிகிதம் அளவிற்கு செய்து முடிக்க முடியும் என்று நம் விஞ்ஞானிகள் விளக்கும் கூறினர். ஆனாலும் மறைந்த லேண்டரை கண்டு பிடித்து மீண்டும் அதிலிருந்து தகவல் பெற அடுத்த 14 நாட்களுக்கு முயற்ச்சிக்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது இந்த நிலையில் காணாமல் போன லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியது. லேண்டர்  சோதனையில் அது நல்ல முன்னேற்றமாக அமைந்தது.

 

லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தால் அதில் தொடர்பு இல்லை எனவே கடந்த 14 நாட்களாக தீவிரமாக, இஸ்ரோ லேண்டரை தொடர்ப்பு கொள்ளும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வந்தது, நாசாவும் இஸ்ரோவுக்கு பல வகைகளில் உதவியது ஆனால் அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இந்நிலையில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்  இன்றுடன் முடிவடைகிறது எனுபது தான் சோகம்... இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், லேண்டரை மீட்பதற்கான முயற்சி வெற்றி பெறவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

அதேநேரத்தில், ஆர்பிட்டர் நன்றாக இயங்கி வருவதாகவும், அதில் உள்ள 8 கருவிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், சந்திரயான்-2 திட்டம் 98 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இஸ்ரோவின் அடுத்த இலக்கு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்தான் என்றும் சிவன் தெரிவித்தார்.