தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதேபோல் புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. 

நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளி நபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள்.  வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.  

இரு தொகுதிகளிலுமே எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும் நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.   

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தமாக 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.