Vijays father said that his sons fans want him to become the CM of Tamil Nadu
தளபதி விஜய் வருங்காலத்தில் முதல்வராக வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுவது குறித்து விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் வெளிவர இருக்கும் டிராஃபிக் ராமசாமி படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயை பற்றி பேசினார் அப்போது; தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லையாம் விஜய். அதேபோல தனது ரசிகர்களையும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
வருடா வருடம் தளபதி விஜய்யின் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்கள், கட்-அவுட் என அதகளம் செய்துவிடுவது வழக்கம். அந்த போஸ்டரில் விஜய்யை வருங்கால முதல்வரே என போடுகிறார்கள் என விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர்.
ரஜினியின் ரசிகர்களோ அவரை வருங்கால முதல்வரே என்று கூறி கடந்த 25 ஆண்டுகளாக போஸ்டர் அடிக்கிறார்கள். ஒரு தந்தையாக என் மகன் இந்த நாட்டில் முக்கியமான நபராக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அதை அவர் அரசியல் மூலம் செய்வாரோ இல்லை வேறு துறை மூலம் செய்வாரோ அது எனக்கு தெரியாது. அது விஜய்யின் விருப்பம் என்று எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், விஜய் தமிழகத்தின் முதல்வராகி ஆட்சி செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அப்படி நினைப்பதில் எந்த தவறும் இல்லை என எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
மேலும், கமல்ஹாஸன் புதுக் கட்சி துவங்கி முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். ரஜினியும் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டு புதுக்கட்சி தொடங்க தீயாக வேலை செய்து வருகிறார். அடுத்து விஜய்யும் புதுக்கட்சி தொடங்கினாலும் விஜய்க்கு பக்கபலமாக ஒரு கூட்டம் இருக்கும்!
