Asianet News TamilAsianet News Tamil

விஜயின் வியாபார யுக்தியா..? பிகில் இசை விழா டிக்கெட் உயர்வு..!

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சு  மக்கள் நாளான?  வியாபார யுக்தியா? என்கிற சர்சை எழுந்த நிலையில் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

Vijays Business Strategy Talk
Author
Tamil Nadu, First Published Sep 20, 2019, 5:47 PM IST

தமிழக அரசியலில் இரு துருவமாக, ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார். Vijays Business Strategy Talk
 
அதே போல நடிகர் சூர்யா, விஜய், சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அரசியல் குறித்த சமூக கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இவர்களில் பலரது கருத்து பொதுவெளியில் விவாதமாக மாறினாலும், சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து பேசியது அரசியல் விவாதமாக மாறியது. குறிப்பாக அமைச்சர்கள் சூர்யாவுக்கு நேரடி எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் நடிகர் விஜய் உட்பட திரை பிரபலங்கள் இப்படி சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கும் போதும் அரசியல் கட்சிங்களால் எதிர்ப்பு கிளம்புவது வழக்கமான ஒன்று தான். Vijays Business Strategy Talk

அந்த வகையில் நடிகர் விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவித்து  பேனர் வைக்க வேண்டாம், சமூக பிரச்சனையை கேளுங்கள் என்று அடுக்கடுக்கான அறிவுரைகளுடன், ஆளும் அரசையும் தாக்கி பேசினார். இதற்கு ஆளும் அரசு விஜயின் பேச்சு விளம்பரத்திற்கானது. படம் ஓட வேண்டும் என்பதற்காக பேசியுள்ளார்.  மக்கள் நலன் அல்ல , வியாபார யுத்தி என்று விமர்சித்தன. இது வியாபார நலனுக்கா அல்லது வியாபார யூக்தியா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில்,  அது வியாபாரத்திற்கானது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. Vijays Business Strategy Talk

நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் பலருக்கும் டிக்கெட் கிடைத்தும் உள்ள அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு குறைந்த இருக்கைகளுக்கு அதிகமான டிக்கெட்கள் விற்கப்பட்டன என விஜய் ரசிகர்களே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். டிக்கெட் கலர் ஜெராக்ஸ் போட்டு விற்ற தகவலும் அம்பலமானது. 

 

டிக்கெட்டை மோசடி செய்து பல லட்சக்கணக்கான பணத்தை ஆட்டைய போடுவதாகவும் தங்களது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர். சமூக பிரசனைகளுக்காக ஹேஸ்டேக் போடுங்கள் என விஜய் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம், டிக்கெட் மோசடி என்ன பல கருத்துக்களை  #அய்யோஅம்மாஆடியோலான்ச் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொதித்து வருகின்றனர்.  விஜயின் பேச்சு மக்கள் நலனுக்கானதாக இருந்தாலும் நல்ல வியாபார யுக்தியாகவும் இருந்து வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios