டி.டி.வி.தினகரனுக்காக ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்த நடிகை விஜயசாந்தி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி 1998ல் பாஜகவில் இணைந்தார். பின்னர் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்து 2009ல்  மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணந்தார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை விஜயசாந்தி நேற்று சந்தித்தார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விஜயசாந்தி கேட்டுக் கொண்டதாகவும், அமமுக கட்சியினருடன் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக சசிகலா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், அமமுகவும் ஆதரவு தரவேண்டும் என விஜயசாந்தி கேட்டுக்கொண்டதாக வரும் தகவல்கள் திமுகவினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.