- Home
- Tamil Nadu News
- அவசர அவசரமாக மகளிருக்கு ரூ.5000... ஸ்டாலினுக்கு ரூட் போட்டுக் கொடுத்த பாஜக..! மெகா ட்விஸ்ட்..!
அவசர அவசரமாக மகளிருக்கு ரூ.5000... ஸ்டாலினுக்கு ரூட் போட்டுக் கொடுத்த பாஜக..! மெகா ட்விஸ்ட்..!
எதிர்க்கட்சிகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்தால் வழங்குகிறோம் என சொல்றோம். ஆனால் திமுக இப்போதேஇருக்கும்போதே ரூ.5000 கொடுத்து விட்டது. இதை நாம் எதிர்க்கவும் முடியாது என கையைப் பிசைகின்றன.

இன்று பிப்ரவரி 13-ஆம் தேதி பொழுது விடிந்ததுமே கிட்டத்தட்ட ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு 5000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் இந்த ஒரு கோடி 31 லட்சம் அக்கவுண்டுகளுக்கும் அந்த 5000 ரூபாய் செலுத்தப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இது மிகப்பெரிய ஒரு அதிர்வை இன்றைக்கு அரசியல் அரங்கில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்று பிப்ரவரி 13ஆம் தேதி காலை அதிமுக சார்பில் மாநிலத்தில் இருக்கிற அனைத்து ஒன்றியங்களிலும் 125 நாள் வேலைத் திட்டத்தை திமுக அரசு சிதைப்பதாக சொல்லி அதை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தவெக தலைவர் விஜய் இன்று மக்கள் சந்திப்புக்காக சேலம் சென்றார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு செய்திகளில் எல்லாம் அந்த செய்திகள் மட்டுமே ஆக்கிரமிக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில்தான் திடீரென முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் அரசியல் ஆதாயமாக இருக்கும் என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை. திமுகவை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பவராக இருந்தாலும் இந்த கருத்தில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே நேரம் இதன் பின்னணி என்ன என்பது குறித்து அரசு தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது உச்சநீதிமன்றத்தில் இலவசங்கள் உள்ளிட்ட இது மாதிரியான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு மார்ச் முதல் வாரம் விசாரணைக்கு வருகிறது.
அப்படி வரும் பட்சத்தில் இது மாதிரியான திட்டங்களை தடை செய்யவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது அல்லது அதற்கான ஒரு பல கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கை பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்தில் வந்துவிடும். அதனால் அடுத்த மார்க், ஏப்ரல் மாதங்களில் இந்த மகளிர் உரிமை தொகையை செலுத்த முடியுமா? என்ற கேள்வியை சட்டரீதியாக சிலர் எழுப்பலாம். சிலர் நீதிமன்றத்திற்கும் செல்லலாம் என ஆலோசனை சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்த மாதிரியான நிலையில்தான் என்ன செய்வது என்று அதிகாரிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆலோசனையிலன் பேரில் ரூ.5000 கொடுத்துள்ளார்கள். இந்த ஆலோசனை கடந்த ஜனவரி 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் ஆளுநர் உரை ஆரம்பித்தபோதே சட்டமன்ற கூட்டத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை பிப்ரவரி முதல் 1500 ரூபாயாக உயர்த்துவதற்கு ஒரு திட்டம் வைத்திருந்தார். கிட்டத்தட்ட அறிவிக்கும் நிலையில் அது இருந்தது என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஆலோசனை நடக்கிறது என்ற தகவல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்துள்ளது.
அவர் ஜனவரி 17ம் தேதி, அதாவது ஜனவரி 20ஆம் தேதி சட்டமன்றம் ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்கள் முன்பாகவே எம்ஜிஆர் பிறந்த நாளில் அதிமுக அலுவலகத்தில் அந்த கொண்டாட்டங்களை முடித்துவிட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று இப்போது திமுக ஆட்சியில் வழங்கப்படுகிற இந்த திட்டமானது குலவிளக்கு திட்டம் என்ற பெயரில் மாதம் 2000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது அப்போது அரசு தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க இருந்த திட்டம் எப்படி முன்கூட்டியே லீக் ஆகி அதை முந்திக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்?
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான அந்த மகளிர் உரிமை தொகையை எப்படி முன்கூட்டியே கிட்டத்தட்ட ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கும் இந்த மூன்று மாதத்துக்கான உரிமை தொகையை ஒரே நேரத்தில் செலுத்துவது எப்படி? அரசு நலத்திட்டங்களை இப்படி முன்தேதியிட்டு கொடுக்க முடியுமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு என்ன செய்வது ஆலோசித்த போதுதான் அவர்களுக்கு பாஜககட்சி ஆட்சி செய்கிற அஸ்ஸாம் மாநிலமே வழிகாட்டி இருக்கிறது. அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந் பிஸ்வாசிமந்தா விஷ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அங்கே இதே போல கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஏழைப் பெண்களுக்கு ரூபாய் வழங்கும் திட்டம் இருக்கிறது.
மகளிர் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் வருகிற ஏப்ரல் மாதம் அஸாலிம் அவர்களுடைய புது வருட கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் வருகிறது. தமிழகத்தை போலவே அஸ்ஸாமுக்கும் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இதையெல்லாம் ஆலோசித்த அஸாம் பாஜக அரசு, ஜனவரி 4ஆம் தேதி மொத்தம் 8,000 ரூபாய் அசாம் பெண்களுக்கு அவர்களுடைய அக்கவுண்டில் செலுத்த திட்டமிட்டுள்ளது.பிப்ரவரி 20ஆம் தேதி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கடந்த ஜனவரி 4-ம் தேதியே அஸ்ஸாம் முதலமைச்சர் அறிவித்துவிட்டார்.
மகளிர் தொகை ரூ.5000, புது வருட பண்டிகைக்காக 3000 ரூபாய்க்கு கிப்ட் என சேர்த்து மொத்தம் 8000 ரூபாய் 37 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று ஜனவரி 4ஆம் தேதி அஸ்ஸாம் முதலமைச்சர் அறிவித்துவிட்டார். அதையே நாம் முன்பேசெய்து விடலாம் என்ற அடிப்படையில் இன்று அதற்கான மெக்கானிசமும் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை மகளிர் வங்கிக் கணக்கில் சென்று விடுமாறு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதே நேரம் இது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் உண்மை. எதிர்க்கட்சிகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்தால் வழங்குகிறோம் என சொல்றோம். ஆனால் திமுக இப்போதேஇருக்கும்போதே ரூ.5000 கொடுத்து விட்டது. இதை நாம் எதிர்க்கவும் முடியாது என கையைப் பிசைகின்றன. திமுக அரசு தேர்தலுக்காக இப்படி செய்கிறது என்று எதிர் கட்சிகளால் எதிர்க்கவும் முடியாது.
