MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேண்டாம்... சபரீசன் எடுத்த நேரடி சர்வே..!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேண்டாம்... சபரீசன் எடுத்த நேரடி சர்வே..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் காங்கிரஸ் நமக்கு உதவுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் நமக்கு காங்கிரஸால் லாபமில்லை. அதே நேரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் வாக்குக்கு கொடுக்கிற பணத்தை அதிகப்படுத்தினால் அதையும் நம்மால் சமாளிக்க முடியும்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 13 2026, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஊசலாட்டத்தில் காங்கிரஸ்
Image Credit : Asianet News

ஊசலாட்டத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கூட்டனி விவகாரத்தில் திமுக சொல்வதை சோனியா காந்தி முழு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் சொல்வதையும் திமுக ஏற்றுக் கொள்ள வேண்டும் என உறுதி காட்டுவதாக கூறுகிறார்கள். ஆட்சியில பங்கு என்பது எல்லாம் பேர வலிமையைக்கூட்ட காங்கிரஸ் வைக்கிற கோரிக்கை என்கிறார்கள். அவர்களின் பிரதான கோரிக்கையே 42 தொகுதிகள்தான். திமுகவை பொறுத்த வரை 25 க்கும் மேல் ஒன்று அல்லது இரண்டு தொகுதியை கூடுதலாக பரிசீலிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. இந்த விஷயத்தில் சோனியா காந்தி, திமுக பக்கம் நிற்பதாக சொல்கிறார்கள்.

24
ஸ்டாலின் பிடிவாதம்
Image Credit : ANI

ஸ்டாலின் பிடிவாதம்

திமுக தான் தமிழ்நாட்டில் பெரிய சக்தி. அவர்கள் சொல்வதை கேட்பது தான் கட்சிக்கு நல்லது என்பது சோனியாவின் வாதமாக இருக்கிறது. ஆனால் திமுக கொடுப்பதை விட, கூடுதலாக வாங்கினால்தான் கட்சி வளரும் என்பது ராகுல், பிரியங்காவின் வாதமாக இருக்கிறது என்கிறார்கள். தமிழ்நாட்டில் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் சோனியா பக்கம் நிற்கிறார்கள். நிலைமை இப்படியே போனால் திரும்பவும் காங்கிரஸ் ஜனநாயக பேரவைய துவங்கி திமுக பக்கம் கட்சி நிற்கிற நிலைமை ஏற்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபர தகவலாக இருக்கிறது. இந்த பிளானுக்கு திமுகவும் தயாராக இருக்கிறது. அதனால்தான் முதல்வரே ‘‘கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. அது காங்கிரஸுக்கு தெரியும்’’ என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆலோசனை மேற்கொண்டார் சபரீசன். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் அவர் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் விஜய்க்கு 20 சதவீதம் ஓட்டுக்கள் இருக்கிறது என்கிறார்களே.. அது உண்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீங்க? உங்க பகுதியில் எப்படி இருக்கு? எனக் கேட்டு இருக்கிறார். அதற்கு நிர்வாகிகள், ‘‘ விஜய்க்கு 20 சதவீதம் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இங்கே ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அதுவும் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கடலோர பெர்னாண்டோ பிரிவு மக்களிடம் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.

Related Articles

Related image1
Feb 14 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள்.!
34
விஜயின் போலி பிம்பம்
Image Credit : Asianet News

விஜயின் போலி பிம்பம்

ஏற்கனவே அந்த பிரிவு மக்களின் வாக்குகளை நாம் தமிழர் கட்சி வைத்திருக்கிறது. அதிலே ஒரு பிளவை ஏற்படுத்தி விஜய் அந்த வாக்குகளில் குறிப்பிட்ட ஓரளவே அவர் பெறலாமே தவிர திமுக உடைய வாக்கு வங்கியில் விஜய்க்கு எந்த வேலையும் இல்லை’’ எனக் கூறியுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்னொரு முக்கியமான கேள்வியையும் சபரீசன் எழுப்பி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி நம் கூட்டணியில் இருக்க வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு மெஜாரிட்டி நிர்வாகிகள் மிகப் பெரும்பாலானவர்கள்,‘‘காங்கிரஸ் நமக்கு வேண்டாம்.

44
காங்கிரஸ் இல்லாமல் சமாளிக்கலாம்
Image Credit : our own

காங்கிரஸ் இல்லாமல் சமாளிக்கலாம்

காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொண்டால் நாம் குறிப்பாக மதுரைக்கு இந்தப் பக்கம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் நமக்கு பெரிய செல்வாக்கு கிடைக்கும் எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் காங்கிரஸ் நமக்கு உதவுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் நமக்கு காங்கிரஸால் லாபமில்லை. அதே நேரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் வாக்குக்கு கொடுக்கிற பணத்தை அதிகப்படுத்தினால் அதையும் நம்மால் சமாளிக்க முடியும். எனவே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணிக்கு வேண்டாம்’’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இதை சபரீசன் முதலமைச்சரிடமும் எடுத்துச் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் இன்று ரவுண்ட் கட்டும் கனமழை? எந்தெந்த மாவட்டங்களில்! பனிபொழிவு எப்படி இருக்கும்?
Recommended image2
5000 இல்ல.. 50000 கொடுத்தாலும் திமுகவின் தோல்வி உறுதி..! அடித்து சொல்லும் டிடிவி தினகரன்
Recommended image3
சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. பரபரப்பு! என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
Feb 14 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved