சீமானையும், அவரது தம்பிகளையும் படுமோசமாக திட்டி நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீரழித்து விட்டு  ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அவ்வப்போது சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’என்னடா ரொம்ப பேசுறீங்க. உங்க அண்ணன் பெரிய புலி. நாங்க நாய்களா? பொம்பள விஷயத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். 

உங்க அண்ணனுக்கு பதில் சொல்கிற யோக்கியதை இல்லை. சும்மா சவுண்டு விட்டு கொண்டிருக்கிறீர்கள். உங்க அண்ணனுக்கு பெரிய இவரா?  கமிஷனர்  அலுவலகத்துக்கு வந்து பதில் சொல்ல முடியல. பத்து வருஷமா பதில் சொல்ல வக்கில்லை. மு.க.ஸ்டாலின் உங்களுக்கு நாய் மாதிரி தெரிகிறாரா? பத்து வருஷமா பாய்ந்து அடித்திருக்கிறேன். நான்தான் புலி.

என்னடா ஒரு பெண்ணை பற்றி தப்புத்தப்பா பேசுறீங்க. எனக்கு யார் சப்போர்ட் செய்தாலும் அவர்கள் உங்களுக்கு நாய் மாதிரி தெரிகிறார்களா? ஒரு பொண்ணோட வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகத் தெரிகிறதா? உங்கள் அண்ணன் சீமான் தான் பொட்டை’’ என கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.