கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டில் சுதீஷின் சொத்து மதிப்பு 336 சதவீதம் உயர்ந்துள்ளது. இது அவர் சமர்ப்பித்துள்ள வேட்பு மனுவில் தெரியவந்துள்ளது.

தன்னுடைய பெயரிலும் தனது குடும்பத்தின் பெயரிலும் 60 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.17.18 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.42.99 கோடி.2014-ம் ஆண்டும் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுதீஷ் போட்டியிட்டார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 33 கோடியே 91 லட்சமாக இருந்தது. அப்போதைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அவரின் சொத்து மதிப்பு 77 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக அசையாக சொத்துகளின் மதிப்பு 336% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சுதீஷ் வருமான வரித் தாக்கல் செய்யும்போது 2013-14-ம் நிதியாண்டு மற்றும் 2017-18-ம் நிதியாண்டில் தன்னுடைய வருமானம் 53% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எல்.கே.சுதீஷ் அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் களமிறங்குகிறார்.