தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடிவில் பழைய விஜயகாந்த்தை படு மாஸாக பார்க்க முடிந்தது. கேப்டனின் மரண மாஸ் என்ட்ரியும், அந்த என்ட்ரிக்கு ஏற்ற பக்கா BGM ஸ்கோர் தெறிக்கவிட்ட சீனை தனது ட்விட்டரில் போட்டிருக்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக  அமெரிக்காவில் இருந்தாலும் புத்தாண்டு, குடியரசு தினம், கட்சியின் கொடி நாள் என ரசிகர்களுக்கு அதே பழைய ஆக்டிவோடு ரசிகர்களுக்கு வாழ்த்து விஈடோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்  தேமுதிக கொடி நாளை முன்னிட்டு விஜயகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, " #வல்லரசு திரைப்படத்தில் முதன்முறையாக தேமுதிக கொடி இடம் பெறும் காட்சி. #தேமுதிககொடிநாள் #DMDKFlagDay".

விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களோ மறக்க முடியாத படம் சார். உங்களை மீண்டும் படங்களில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது உடல் நலம் தேறி பழைய விஜயகாந்தாக திரும்பி வாங்க தலைவா. அதே பழைய கேப்டனைப் பார்க்க தமிழகம் காத்திருக்கிறது என்று விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமல்ல தல தளபதி ரசிகர்களையும் ஒரே வீடியோவை வெளியிட்டு ஏங்க வைத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.