Vijayakanth opposed karunanithi and jayalalitha - said by permalatha
கருணாநிதி, ஜெயலலிதாவையே எதிர்த்தவர் விஜயகாந்த். இப்போது கட்சியை ஆரம்பிக்கும் ரஜினி, பெரிய விஷயமே இல்லை என பிரேமலதா விஜயகாந்த், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்பதுதான், இன்று சூடான செய்தியாக வலம் வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும். வேறு மொழிக்காரர்கள் ஆளக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விமர்சித்து வருகிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. எப்போதெல்லாம் காவிரி பிரச்சனை எழுகிறதோ அப்போதேல்லாம் ரஜினி பற்றி பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக அவரது மொழி குறித்து கூடுதலாக பேசுவார்கள்.
தமிழகத்தை ஆண்ட எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே வேறுமொழி பேசியவர்கள்தான். இது எல்லோருக்கும் தெரியும். கருணாநிதியின் உண்மையான மொழி என்ன என்பது குறித்து கூட மாறுபட்ட கருத்து இருக்கிறது.‘
தமிழகத்தை பொறுத்தவரை யார் தலைவராக வர வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மொழி மட்டுமே ஒரு முதல்வருக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியல் களத்தில் ரஜினி வந்தால், அவரை எதிர்க்க விஜயகாந்த் தயாராக உள்ளார். கடந்த 2005ம் ஆண்டிலேயே தேமுதிகவை தொடங்கிவிட்டோம்.
மாபெரும் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சியில், அவர்களையே எதிர்த்தவர் விஜயகாந்த். தற்போது கட்சியை ஆரம்பிக்கும் ரஜினி பெரிய விஷயமே இல்லை. நாங்கள் யாரையும் கண்டு பயப்பட மாட்டோம். யாரையும் எதிர்த்து போட்டியிடும் சக்தி எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
