vijayakanth is better then Rajinikanth

எனக்கு அரசியலுக்கு வரதுக்கு பயம் இல்ல. மீடியா பாத்துதான் பெயம் பெரிய பெரிய ஜாம்பவானுங்கல்லாம் மீடியா பாத்தா பயப்படறாங்க. நா ஒரு கொழந்த, எனக்கு எப்டி இருக்கும். காலைல வீட்ட விட்டு வரும்போது போகும்போதெல்லாம் டக்னு டக்னு மைக்க நீட் ஏதாவது கேட்டுடுவாங்க. நா ஏதாவது சொன்ன உடனே அது debate ஆய்டும். முந்தா நேத்து போய்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒருத்தர் மைக்க நடுவுல உட்டு. சார் உங்க கொள்கை என்னன்னு கேக்கறாரு. என்னது கொள்கைகளா? எனக்கு ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு . எல்லாருமே சின்னப் பசங்க. Nice Nice. சோ சார் மொதல்லயே என்ன பயமுறுத்தி வெச்சிருக்காரு. ’ சார் இந்த மீடியா கிட்ட மட்டும் ரொம்ப ஜாக்கரதையா இருங்க. ஒரு மீடியா பர்சனாதான் சொல்றேன்’னு சொல்லிருக்காரு.. இவர் இந்த மேட்டரை சொன்னதுமே நெட்டிசங்கள் கேப்டன் விஜயகாந்த்தின் திராணியை ஒப்பிட்டு வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.

மீடியாவுக்கு அஞ்சாதவர், எதற்கும் துனிஞ்சவர்... விஜயகாந்த் பத்திரிகயாளர்களை அணுகும் முறை ரொம்பவே கெத்தாக இருக்கும். எப்போ என்ன நடக்கும்னே தெரியாத அப்படி பேட்டி முழுவதுமாக விறுவிறுப்பாக இருக்கும்..

அவற்றில் சில... சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார்.

அதேபோல மற்றொரு முறை... சென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார்.

இதனை அடுத்து டெல்லியில் நடந்த அனைத்து கட்சியினர் பிரதமை சந்தித்ததற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆங்கிரி பேர்டாக மாறிய கேப்டன் ‘தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வார்த்தை சமூகவலைதளங்களில் “ஆல் டைம் ஃபேவரைட்”

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த வந்த போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் ஜாலியாக பேசினார். இதனையடுத்து ஒருமுறை எடக்கு முடக்காக கேள்வி கேட்ட ஒரு செய்தியாளரை நீங்க யெல்லாம் பத்திரிகயாளரா ? “த்தூ” என செய்தியாளர்களைப் பார்த்து காறி துப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

என்னதான் விஜயகாந்த் இப்படி பலமுறை மீடியாக்களிடம் சிக்கினாலும், அவரின் பதில் சொல்லும் விதம் ரசிக்கவைக்கும்... இப்படி இருக்கையில் புதியதாக ஆன்மீக அரசியல் பயணம் தொடங்கியுள்ள ரஜினிகாந்த்... அரசியலுக்கு வர பயமில்லை திடீர்னு ஒருத்தர் மைக்க நடுவுல உடுறாரு... உங்க கொள்கை என்னன்னு கேக்கறாரு. எனக்கு ரெண்டு நிமிஷம் தலை சுத்திடுச்சுன்னு இப்பவே இப்படு சொதப்புறாரே என சமூக வலைதளங்களில் ரஜினியை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசங்கள்.

ஜெயலலிதா இருந்தபோது அவரது ஆட்சியில் ஊழல் நடைபெற்றது. எனினும் சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினியும், கமலும் ஏன் துணிந்து அவருக்கு எதிரான கருத்துகளை என அவர் உயிரோடு இருந்ந்த பொது முன்வைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் அப்படி அல்ல. ஜெயலலிதா அரசின் ஊழலை நான் மட்டுமே எதிர்த்தார். அவருக்கு எதிராக குரல் குரல் கொடுத்தார். இவ்வளவு ஏன் கருணாநிதியையும் நான் எதிர்த்துள்ளார். திமுகவையும் அதிமுகவையும் ஒரு நேரத்தில் அலறவைத்தார்.

ரஜினி ஒரு காலமும் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ, விஜயகாந்தாகவோ ஆகவே முடியாது. தமிழக அரசியலில் மிகப்பெரும் ஜாம்பவனாக இருக்கும் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள். அதில் வெற்றியும் பெற்றவர்கள் ஆனால் ரஜினிகாந்த் இதுவரை ஒரு கருத்தைக் கூட வெளிப்படையாக கூறியதில்லை. ஜெயலலிதா மறைவு, கலைஞர் ஆக்டிவ் ஆக இல்லாத இந்த நேரத்தில், சிஸ்டம் சரியில்லை, தமிழக அரசியலில் மாற்றம் என கூறி ஆன்மீக அரசியல் பிரவேசத்தை வெளியிட்டிருக்கிறார்.

ரஜினியின் இந்த ஆன்மீக அரசியலை சந்தேகத்தோடுதான் அணுக வேண்டும். 1996ம் ஆண்டு, மக்கள் எதிர்ப்பார்ப்போடு இருந்தபோது, அவர் ஏறக்குறைய அரசியலில் இறங்கினார் என்றே கூற வேண்டும். லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்த ரஜினிகாந்த்தால் மட்டுமே இரண்டு பெரிய ஜாம்பவான்களாக இருந்த ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் நேரடியாக எதிர்க்க முடியும் என கருதப்பட்டார். ஆனால் அதன் பிறகு, அவர் தொடர்ந்து ஊகங்களை எழுப்பும் வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார். தற்போது அவர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் மக்கள் அவரை விரும்புகிறார்களா என்பதுதான் கேள்வி. 

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத ஒரு சூழலில், இதுதான் அரசியலில் இறங்க நல்ல தருணம் என்று ரஜினி முடிவெடுத்திருக்கலாம். ஒரு நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ரஜினி, கடந்த ஒரு ஆண்டாகத்தான் தமிழக அரசியல் சூழல் மோசமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார். 

ஜெயலலிதாவும், கருணாநிதியும் என இறந்து திமிகலங்கள் இல்லாத இந்த கடலில் ஈசியாக மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்திலேயே ரஜினி இருக்கிறார். அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தோடு, குறைந்தது விஜயகாந்தைப் போல தன் ரசிகர் மன்றங்களை இறுதி வரை, பலமாகவும், உயிர்ப்போடும் கூட ரஜினி வைத்திருக்கவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, ரஜினி ரசிகர் மன்றங்களை பதிவு செய்து, அவற்றுக்கு பதிவு எண் வழங்கும் நடைமுறையை ரஜினி கை விட்டு விட்டார். அரசியல் ஆசை இருக்கும் எந்த ஒரு நபராவது இப்படியொரு காரியத்தை செய்வானா ? அதையும் ஆன்மீக அரசியல் தலைவர் ரஜினி செய்தார்.