Asianet News TamilAsianet News Tamil

நான் சொல்றத செஞ்சா தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வராது... எடப்பாடிக்கு விஜயகாந்த் கொடுத்த ஐடியா...

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி  தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் ஐடியா கொடுத்துள்ளார்.
 

Vijayakanth idea to edappadi palanisamy
Author
Chennai, First Published Jul 28, 2019, 4:36 PM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி  தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் ஐடியா கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர் நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும். மதுராந்தகம் ஏரி போன்ற மிக முக்கியமான ஏரிகள் அந்தந்த பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுபோல் அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி தடுப்பணைகளை சீர்படுத்தி மழைநீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

மேலும் பல கோடி ரூபாய் மழைநீர் சேமிப்புக்காகவும், தடுப்பணைகள் அமைப்பதற்காகவும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்கும். இந்த அரசு மழைக்காலம் தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் உடனடியாக ஏரிகளை தூர்வாரி தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கின்ற நிலையை வரும்காலங்களில் உருவாக்கவேண்டும். மதுராந்தகம் ஏரியை தூர் வாரி, அந்த பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்கவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios