தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக  பண்ணை வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த பண்ணை வீட்டில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த பண்ணை வீட்டில் இருந்துதான் விஜயகநத் வீட்டுக்க்கு பால் சப்ளை செய்யப் படுவதாக கூறப்படுகிறது. இந்லையில் நேற்று இரவு பண்ணை வீட்டில் உள்ள பசுக்களுன்கு வேலையாள் தீவனம் வைத்துவிட்டு படுக்கச் சென்றுவிட்டார்.

அதிகாலையில் வழக்கம் போல் 3 மணிக்கு எழுந்து அந்த வேலையாள் பால கறப்பதற்காக சென்றபோது, 2 பசு மாடுகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் மாடுகளை காணவில்லை. இதையடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு தகவல் கொடுத்த அந்த வேலையாள் உடனடியாக இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.