vijayakanth arrested due to his protest against governar

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு விஜயகாந்த் தலைமையில் போராட்டம்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தவரை நியமித்தற்கு கண்டனம் தெரிவித்தும், ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி. சேகரை கண்டித்து முழக்கமிட்டு தேமுதிக மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு போலிஸ் வேனில் ஏற்றிசெல்லப்பட்ட விஜயகாந்த், மற்றும் பிரேமலதா விஜயகாந்த்,தொண்டர்கள் நந்தனம் YMCA மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.