vijayakanth against speech to jeyalalitha in assembly

அரசியலில் செயல்களை விட ‘சொல்’களே அலாதியாய் ஆதிக்கம் செலுத்துபவை! நேற்று மற்றும் இன்று, எந்த அரசியல் தலைவர், யாரைப் பார்த்து என்ன சொன்னார்கள்? என்பதை டீல் செய்யும் பகுதி இது...
* மதராஸா பள்ளிகளில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுவதாக சொல்வதை ஏற்க முடியாது. நானும் அங்கே படித்தவன் தான். நான் பயங்கரவாதியா?
- மத்தியமைச்சர் அப்பாஸ் நக்வி
* ஜெயலலிதா பயங்கரவாதத்தை எதிர்த்தார். ஆனால் இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அக்கறை காட்டினார். தி.மு.க. தலைவர் போல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, போர் முடிந்ததும் போய்விடவில்லை.
- அமைச்சர் தங்கமணி.
* கொள்கைகளை மறந்து பா.ஜ.க., ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் 14 வருடங்கள் மத்திய பதவியிலிருந்தது தி.மு.க.
- எடப்பாடி பழனிசாமி
* உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 48%மாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் பட்டப்படிப்பு முடிப்போருக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது
- பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.
* மக்கள் பிரச்னையை பேச தைரியம் வேண்டும். சட்டசபையில் ஜெயலலிதாவையே கதிகலங்க வைத்தவர் விஜயகாந்த். இவரா எடப்பாடி பழனிசாமிக்கு பயப்படுவார்?
- பிரேமலதா
* போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு பெறும் மசோதாவை துவக்க நிலையிலேயே எதிர்க்கிறோம். இதை ஆதரித்தால் மக்கள் எங்களைப் பார்த்து சிரிப்பர்.
- ஸ்டாலின்
* கொசு ஒழிப்பு பணியில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டதுடன், ஊழலிலும் ஈடுபட்டது என்பதுதான் உண்மை.
- அன்புமணி ராமதாஸ்.
* வாஜ்பாய், அத்வானி காலங்களில் கட்சியின் சாதாரண தொண்டர் கூட கட்சியின் தலைவரை எளிமையாய் சந்திக்க முடியும். ஆனால் இப்போது உள்ள பா.ஜ.க. தலைவரை மூத்த, முக்கிய நிர்வாகிகள் கூட சந்திக்க முடியவில்லை.
- ய்ஷ்வந்த் சின்ஹா.
* தமிழ் உணர்வை பாதிக்கும் வகையில் வைரமுத்து பேசிய அன்றைய நாளில் என் வீட்டு பூஜை அறையில் இருந்த ஆண்டாள் படம் கீழே விழுந்துவிட்டது.
- விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன். 
* இலவசங்களை கொடுப்பதன் மூலம் மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர். தேவையான மக்களுக்கு பயன்படும் வகையில் அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும். 
- கிரண் பேடி.