அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிற்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன்அனுப்பியதையடுத்து அவர் இன்று நேரில் ஆஜரானார்.

கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், கீதாலட்சுமி, சரத்குமார் ஆகியோரை நுங்கபக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டிஸ் அனுப்பியது.

தொடர்ந்து 3 பேரும் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், அதைதொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்குள் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.

நேற்று ஆஜராகாத ரம்யா இன்று ரம்யா வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகினார்.