தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்பை வைத்து, தமிழகத்தைப் பொறுத்தவரை தப்பித்துக் கொள்வோம், ஆனால், வெளியில் பொறுத்தரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டு முகவரிக்கு, பாஜகவினர் ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், காவி வேட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடிதம் ஒன்றும் பார்சலாக வந்துள்ளது. அதில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்றும், ஆன்மீகத்தை அடிப்படைய்டாகக் கொண்டது பாரத நாடு. ஆன்மீகத்தின் ஆதாரம் காவி. மோடி வெற்றி பெற்றால் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலைய வேண்டும் என்று எந்த எண்ணத்தில் கூறினீர்களோ தெரியாது. 

ஆனால் இனி வரும் காலங்களில் காவியே பிரதானமாக இருக்கும். காவியை பற்றி கூறியதற்காக முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் உள்ளது.