சமீபகாலமாக ரஜினி அரசியல் வருகை குறித்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சுவாமி.

சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘’தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார். தமிழந்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அவர் கூறியது ரஜினியை விமர்சிக்கும் வகையில் இருந்தது. 

அதேபோல் மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘’புலி வருது கதை தான் ரஜினியின் அரசியல்’’என எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ரஜினியின் அரசியல் மற்றவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று கூவுவதே தவறு என்பேன் , அது அவர் இஷ்டம் , அவர்  எப்ப வேணும்னாலும்  வருவார் . உன் இஷ்டத்துக்கு உன் மவன் கூட வர மாட்டான்’’ என கூறியுள்ளார்.

 

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.