ஐடி ரெய்டு நடத்தியதால் அதனை மனதில் வைத்து தான் யாரென்று காட்டுவதற்காக விஜய் தனது ரசிகர்களை கூட்டி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் செல்ஃபி எடுத்து மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

’விஜய் நாய்க்கு ரசிகர்கள் மூலம் பாக்ஸ் ஆபீஸ் பவர் கிடையாது. தனது திரைப்படம் வெளியாவதற்கு முன் பட விழாக்களில் மைக் பிடித்து அடுத்தவர்களை வம்புக்கு இழுத்து ஒரு நெகடிவ் பப்ளிசிட்டி தேடி அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி சுயலாபம் அடைவது தான் நோக்கம். மற்றபடி மக்கள் மீது அவருக்கு அக்கறை எல்லாம் கிடையாது.

 

சரியாக கவனித்தீர்கள் என்றால்,  பைரவா, ஜில்லா,  புலி போன்ற படங்கள் ரிலீசாவதற்கு முன் அவர் யாரையும் வம்பிழுக்கவில்லை. ஆகையால் அந்தப்படங்கள் தோல்வியை தழுவின. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் ஆளாக போய் நட்பு பாராட்டுவார்.  அடுத்து தனது படங்கள் ரிலீசாகும்போது அதே கட்சியை எதிர்த்து பேசி பரபரப்பை ஏற்படுத்துவார்’’ எனக் கூறுகிறார்கள். 

’இதுஒருபுறமிருக்க, நெய்வேலி படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென ரசிகர்களை அழைத்து செஃபி எடுத்துக் கொண்டார். உடனே ஒரு சூப்பர் ஸ்டார் உதயமாகி விட்டதாக படபடக்கின்றனர்’’என தனது ஆதங்கத்தை கொட்டியபடி அரசியல் ஆலோசகர் விஜயின் செஃல்பி ரசிகர் சந்திப்பை பற்றி நம்பிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

’’மாஸ் ஹீரோ என்ற தன்னுடைய இமேஜ் ரெய்டு மூலம் சேதாரமாகி விட்டதை விஜய் உணர்ந்து கொண்டார். அந்த ஈகோவும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருப்பதாலும் துணிந்து அரசியல் களம் இறங்கிவிட்டார். அதனால் சென்னை, புதுவை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் உள்ள அவரது ரசிகர்களுக்கு மன்ற நிர்வாகி வாயிலாக ’தளபதியை பார்க்கலாம் கிளம்பி வாங்க. நமது வலிமையை என்னவென்று காட்ட வேண்டும்’ என்று இரகசிய அழைப்பு வைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

 அத்தனை அரசியல் தலைவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் வேன் மீது நின்று செல்ஃபி எடுத்துக் காட்டினார் விஜய் என்கிறார்கள். ரெய்டுக்கு பின் நெய்வேலியில் ரசிகர்களை சந்திக்கும் வீடியோக்கள் பேஸ்புக்கில் லைவாகவும், பலவித சோசியல் மீடியாக்களிலும் பகிரப்பட்டது.  அவரது ரசிகர் மன்றத்தினர் அந்த போட்டொவையும், வீடியோவையும் சுடச்சுட பதிவிட்டு பெரும் ஆதரவு அலையை விஜய்க்காக உருவாக்கினர்.  ஐசப்போர்ட் விஜய் எனும் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி பரப்பி வந்தனர். விஜய்யின் இயக்கம் சார்பில் அவசரகதியில் ஒரு ஐடி பிரிவு உருவாக்கப்பட்டது.  விஜய் ரசிகர்கள் பல லட்சம் பேப் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் முதல் டி.பி.வரை இந்த விஜயின் படத்தை வைத்திருந்தனர்.’’ எனக் கூறினார்.

இது குறித்து பேசிய விஜய்க்கு நெருக்கமான ஒருவர், ’தளபதி போது தலைவராகி விட்டார். கட்சி துவக்கி பெயர் வைக்கவில்லை. தவிர அவர் களமிறங்கி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் என்பதுதான் சத்தியம். எங்கள் தலைவரை ரொம்ப அசிங்க படுத்தி விட்டார்கள். இதில் மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசின் கையும் முழுமையாக இருக்கிறது. எங்கள் பலத்தை காட்டவே இந்தக் கூட்டதை கூட்டினோம்’’ என்கிறார். 

சாதரணமாக அதிகம் சம்பாதிப்பவர்களின் இல்லங்களில் ஐடி ரெய்டு நடப்பது வழக்கமான நடவடிக்கைதான். ஐடி ரெய்டு நடத்தியதால் ஆத்திரப்பட்டு சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தி அரசுகளுக்கு மிரட்டல் விடும் வகையில் விஜய் நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக அக்கறை கொண்டவர்கள்.