வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, நடிகர், விஜய் ஆதரவை கோர முடிவு செய்துள்ள, திமுக தலைமை, அவரின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இது குறித்து, விஜய் ரசிகர் வட்டாரத்தில்; விஜய் நடித்த, மெர்சல் படத்தில், மத்திய அரசு அமல்படுத்திய, செல்லாத நோட்டு அறிவிப்பு, GST போன்றவை விமர்சிக்கப்பட்டன. இதனால், தமிழக பிஜேபி தலைவர், தமிழிசை, தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர், விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேபோல, விஜய் நடித்து வெளியான, "சர்கார்" படத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட, இலவச மிக்சி, கிரைண்டர் திட்டம் குறித்து விமர்சிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த, அதிமுகவினர், விஜய் பேனர்கள், 'கட் அவுட்'களை கிழித்து எறிந்தனர்.

அதுமட்டுமல்ல, அதே சர்கார் படத்தில், விஜய்யின் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை விமர்சித்து, அன்புமணி  கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். ஏற்கனவே, அரசியல் கட்சி துவக்க போவதாக, ரஜினி அறிவித்தபோது, அவருக்கு நெருக்கடி தர, விஜயை தங்கள் பக்கம் இழுக்க திமுக, முயற்சித்தது. அதற்கு, விஜய் தரப்பில் பதில் எதுவும் இல்லை. ரஜினி, கட்சி அறிவிப்பை தாமதம் செய்வதால், விஜய்யை இழுக்கும் பணியில் திமுக ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், தளபதி விஜய்யை, கடுமையாக விமர்சனம் செய்த, அதிமுக - பிஜேபி - பாமக ஆகிய கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி அமைத்துள்ளன. ஜெயலலிதா இல்லாததால், லோக்சபா தேர்தலில், சுலப வெற்றியை எதிர்பார்த்திருந்த, திமுகவுக்கு, அதிமுக கூட்டணியால், கடும் சவால் ஏற்பட்டுள்ளது.இதனால், தங்கள் அணியை பலப்படுத்தும் முயற்சியில், ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். 

இதற்காக, தளபதி விஜய் ஆதரவை கோர, திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது. விஜய் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அவரின் தந்தை சந்திரசேகருக்கு, ராஜ்யசபா MP, பதவி வழங்க இருப்பதாகவும், விஜய் தரப்பினரிடம், திமுக பேச்சு நடத்தி வருகிறது.அதேசமயம், தேர்தலின் போது மட்டும், திமுக, - அதிமுக தங்களை நாடி வருவதாகவும், பின், கிள்ளுக்கீரையாக நினைப்பதால், யாருக்கும் ஆதரவு அளிக்க கூடாது எனவும், ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜயிடம் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.