இப்போ அந்த மனுஷன் என்னான்னா கரைவேஷ்டி கட்டாத அரசியல் தலைவனாகிட்டார், பிரசாரத்தையும் கனஜோராக தொடங்கிட்டார்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

மேற்படி மனிதர்களிடம் விளக்கமான ரிப்போர்ட்டை நாம் கேட்டபோது....”ஆக்சுவலா விஜய்க்கும், மத்திய அரசுக்கும் மெர்சல் பட கிளைமேக்ஸ் டயலாக் பஞ்சாயத்துக்குப் பிறகு எந்த மோதலும் இல்லை. ஆனால் இன்னொரு நட்சத்திரத்தின் அரசியல் எண்ட்ரிக்காக இவரை மிரட்டி வைக்கிறோமுன்னு சொல்லி உசுப்பிடுச்சு டெல்லி லாபி. ரெய்டுக்குப் போன வருமான வரித்துறை கம்முன்னு விசாரிச்சுட்டு வந்திருக்கலாம். ஆனா ஏதோ அக்யூஸ்ட் மாதிரி அவரை கார்ல ஏத்தி, ரெண்டு அதிகாரிங்களுக்கு நடுவுல  ஒக்கார வெச்சுகிட்டு சென்னைக்கு தூக்கிட்டு வந்ததெல்லாம் டூ மச் இல்லை டூ டூ மச். இதனால விஜய்யோட ஈகோ ரொம்பவே சேதாரமாயிடுச்சு. 

விளைவு, ரெய்டுக்கு மறுநாள்ள இருந்தே தன்னோட ஸ்டைலை மாத்த துவங்கிட்டார். ரசிகர்களின் பார்வையில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்க விரும்பும்  கூச்ச சுபாவமான விஜய்யோ, இந்த சம்பவத்துக்குப் பிறகு அவங்களோடு ரொம்ப நெருக்கமாகி, பாருங்க என்னோட செல்வாக்கை!ன்னு காட்ட ஆரம்பிச்சுட்டார். 

நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்ல வேன் மேலே ஏறி அவர் செல்ஃபி எடுத்ததெல்லாம் தமிழக இளைஞர் பட்டாளத்தை மொத்தமா தன் பக்கம் வளைக்கவும், டெல்லி லாபிக்கு ‘என் பின்னாடி எத்தனை ஆயிரம் பேருன்னு பாருங்க’ன்னு காட்டவும் தான். 
’நான் பட்ட அடியை திருப்பி கொடுத்தே ஆகணும்!’ன்னு தன்னோட நெருங்குன மனிதர்களிடம் சொல்லியிருக்கிற விஜய், எந்த யோசனையுமில்லாம அரசியலுக்குள்ளே வந்துட்டார் அப்படிங்கிறதுதான் உண்மை. கரை வேஷ்டி கட்டாமல், கட்சியை துவங்காமல், இப்போ இருக்கிற தன்னோட ‘விஜய் மக்கள் இயக்க’த்தின் ஸ்ட்ரென்த்தை அப்படியே கையில் வெச்சுக்கிட்டு அரசியல் தலைவன் அவதாரம் எடுத்துட்டார். இது சர்வ நிச்சயமான உண்மை. 

வரும் 2021 சட்டமன்ற தேர்தலாகட்டும், அதற்கு முன்னாடி ஒருவேளை மீதமிருக்கிற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தாலும் சரி இரண்டிலுமே தி.மு.க.வை ஆதரிக்கும் படி தன்னோட ரசிகர்களுக்கு ரகசிய உத்தரவு போட்டுவிட்டார் விஜய். இதன் மூலமா தி.மு.க.வுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தை விஜய் துவக்கிட்டார்னுதான் அவரோட ரசிகர் மன்ற நிர்வாகிகள் சொல்றாங்க. 
‘வோட் ஃபார் டி.எம்.கே.’ன்னு தளபதியின் வாக்கியமாக ஒரு உத்தரவையே போட்டுட்டாங்க. இதில் இன்னொரு பியூட்டி என்னான்னா, விஜய் அப்படியொரு முடிவெடுக்குறதுக்கு முன்பேயே அவரோட ரசிகர்களும் பா.ஜ.க. மற்றும் அதன் நண்பனான அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாடை எடுத்து, தி.மு.க.வுக்கு சப்போர்ட் பண்ணும் முடிவுக்கு ஏற்கனவே வந்திருந்தாங்க. இந்த நிலையில தங்களோட தலைவரும் அதே முடிவை சொன்னதும், ஹேப்பியாகிட்டாங்க. ஆக இனி வரும் தேர்தல்களில் விஜய் தரப்பின் பல லட்சம் வாக்குகள் அப்படியே தி.மு.க. கூட்டணிக்குதான் போகப்போகுது. 

தங்களுக்கு ஆதரவா விஜய் பிரசாரத்தையே துவக்குனதை உறுதிப்படுத்துக்கிட்டு குஷியாகிட்டார் ஸ்டாலினின் மகனும், தி.மு.க.வின் இளைய தலைவருமான உதயநிதி. தன் கல்லூரி நண்பர் விஜய்க்கு இதுக்காக பர்ஷனலா நன்றியே சொல்லிட்டார்.
தேவையில்லாம விஜய்யை ஓவரா நோண்டிவிட்டு தன் இமேஜுக்கு தானே சேதாரத்தை உண்டு பண்ணினது மட்டுமில்லாமல், அரசியல் ரீதியான சரிவுக்கும் விதை போட்டுடுச்சு அதிகார மையம்.” என்று நிறுத்தினர்