சர்கார்’ படத்தில் நடிகர் விஜய்க்குப் பாட வாய்ப்புத் தராத ஏ.ஆர். ரகுமானை அவரது ரசிகர்கள் வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர்.

அதிலும் சிலர் உச்சக்கட்டமாகப் போய், ஏதோ இனி விஜய் பட வாய்ப்பு வராவிட்டால் ரகுமான் மேடைக்கச்சேரி செய்துதான் பொழக்கவேண்டியிருக்கும்போல என்று எண்ணுமளவுக்கு, ‘இனி ரகுமானுக்கு விஜய் மியூசிக் டைரக்டர் சான்ஸே தரக்கூடாது’ என்றெல்லாம் விஜய்க்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
 
ரகுமான் குறித்து தனது ரசிகர்களின் கமெண்டுகள் வரம்புமீறிப் போய்விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ ‘ரகுமான் என்னைப்பாட அழைக்கவே செய்தார். ஆனால் அந்தப்பாடல் எனது குரலின் லிமிட்டை மீறி ஹைபிட்ச்சில் இருந்ததால் ஸ்டுடியோவுக்குப் போகாமலே மறுப்புத் தெரிவித்தேன்.

 நான் படத்துக்கு ஒரு பாடலாவது பாடிவிடவேண்டும் என்று ரசிகர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும்போது, ஸ்டுடியோவுக்குப் போய் பாட முயற்சித்துவிட்டுக்கூட தவிர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படிப்போயிருந்தால் ரகுமானின் பொன்னான நேரம் வீணாகியிருக்குமே தவிர அந்த ஹைபிட்ச்சில் நான் பாடியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை’ என்கிறார் விஜய்.

ரகுமானை வச்சிக்கிட்டு தவுல் வாசிக்கிற தம்பிங்களா இனியாவது கொஞ்சம் அடக்கிவாசிங்க.