மாஸ்டர் படத்தில் பாஜக இணைந்து விட்டதாக போஸ்டர் ஒன்றை உருவாக்கி அக்கட்சியினரை படு பயங்கடமாக  கலாய்த்து வருகின்றனர். 

மாஸ்டர் படத்தில் பாஜக இணைந்து விட்டதாக போஸ்டர் ஒன்றை உருவாக்கி அக்கட்சியினரை படு பயங்கடமாக கலாய்த்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விட்டது மத்திய அரசு. இதனையடுத்து விஜய் வீட்டில் ஒன்றும் சிக்கவில்லை என அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படபிடிப்பு நடக்கும் இடத்திலும் பாஜகவினர் ஷூட்டிங் நடத்த கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றின் மூலமாக பாஜகவை கலாய்த்து வருகின்றனர். அதாவது பாஜக மாஸ்டர் படத்திற்கு ப்ரீ ப்ரோமோட்டராக மாஸ்டரில் இணைந்திருப்பதாக கலாய்க்கின்றனர். மெர்சல் படத்திற்கு ப்ரோமோஷன் செய்து படத்தை ஓட வைத்தது போல மாஸ்டருக்கு இறங்கி விட்டனர் என கலாய்க்கின்றனர்.