Vijay fans join bjp : சமீப காலமாக நடிகர் விஜய்க்காக ஒட்டப்படும் போஸ்டர்களில் பெரும்பாலும் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயின் 48வது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், போஸ்டர்கள் வாயிலாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீப காலமாக நடிகர் விஜய்க்காக ஒட்டப்படும் போஸ்டர்களில் பெரும்பாலும் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படியான போஸ்டர்களில் தங்களுக்கென தனி ஸ்டைலை கொண்டவர்கள் மதுரை விஜய் ரசிகர்கள். மதுரை ரசிகர்கள் விஜய்யை தமிழகத்தின் முதல்வர் போலவும், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா போலவும், கிரிக்கெட் வீரர் தோனி, பிரதமர், முதல்வர் என பல்வேறு விதமாக அவரை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டி கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்

தற்போது, தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைதலைமை விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி அதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில், நடிகர் விஜய்யை ஒற்றைத்தலைமை என வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகம் முழுக்க நடிகர் விஜய் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளரும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் முன்னிலையில் இன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இது விஜய் ரசிகர் மன்றத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஒருமுறை அஜித் ரசிகர்கள் சிலர் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!