மதுபோதையில் போலீசாருடன் தகராறு... விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அத்துமீறல்..!
அப்போது காரில் முககவசம் அணியாமல் ஒருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் போலீசாருடன் தகராறில் ஈடுப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை, கொண்டி தோப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கார் ஒன்று அசுர வேகத்தில் சென்று அரசுப்பேருந்து மீது மோதியது போல் சென்று நின்றுள்ளது. இதனை கண்ட போலீசார் உடனடியாக காரில் இருந்தவரிடம் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது காரில் முககவசம் அணியாமல் ஒருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் தான் ஒரு வழக்கறிஞர் என்றும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் என தெரியவந்துள்ளது. இது பற்றி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த எஸ்.ஐ. ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்துள்ளார். தற்போது வழக்கறிஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் சென்னையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்