தனியார் ஓட்டல் ரூமில் நாஞ்சில் சம்பத் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பபோது ஒன்று ஒரு வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறுகையில் இந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். இலக்கியவாதியான இவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரனை ஆதரித்தவர், தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவர் குடித்து விட்டு அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

 

இந்நிலையில், இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ள அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.