ஜாதி பேரச் சொல்லி  இடம் வந்து படுக்கிறார்கள். 10 மாதம்... என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் முன்றாம் தரப்பெண் என இழிவாக பேசியது சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ‘’நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்’’என கண்டனம் தெரிவித்து இருந்தார். 

திருமாவளவனின் இந்தப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’பிற சமுதாய ஆண்களுக்கு ஆண்மை இல்லை. அதனால் உங்கள் பெண்கள் எங்கள் 3 ஜாதி பேரச் சொல்லி  இடம் வந்து படுக்கிறார்கள். 10 மாதம்... என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த பாஜகவினரும் பெண்களை பேச மாட்டார்கள். முதலில் தயாநிதி மாறனை கண்டியுங்கள்’’என பதிலடி கொடுத்திருக்கிறார்.