கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தம்பிகள் படையுடன் சென்று பெருவுடையாரை வழிபட்டு அதிரடி கிளப்பினார். தீவிர கடவுள் மறுப்பாளராக பெரியார் மேடைகளில் தோன்றிய சீமான், கட்சி ஆரம்பித்த பிறகு முருகன் முப்பாட்டன் என வேலும், பச்சை துண்டும் அணிந்து வலம் வரத்தொடங்கினார். முருகனுக்கு தைப்பூச விழாவும், கிராம பூசாரிகள் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தினார்.

இந்தநிலையில் தான் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கில் கலந்து கொண்டு பெருவுடையாரை வழிபட்டார். அதுகுறித்து விமர்சனம் செய்த நடிகை விஜயலட்சுமி, ' உங்களுக்கு அசிங்கமாவே இல்லையா சீமான்? ஆரம்பத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த நீங்கள் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசி இருக்கிறீர்கள் ! வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் நெற்றியில் திருநீறு பூசியதற்காக ‘காலையிலேயே பட்டையா’ என்னை எல்லோர் முன்னாடியும் கிண்டலாக கேட்டு சிரிச்சிட்டு இன்னைக்கு சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்யுறீங்க. உங்கள மாதிரி பாவிகளை சிவன் சும்மா விடமாட்டார்' என்று கூறியிருந்தார்.

இதனிடையே தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில் தோன்றும் சீமான், " ஆக்சன்.. பொண்டாட்டி மாமாவை நீ நல்லவன்னு நம்பிராத" என்கிறார். மற்றொரு வீடியோவில் மேல்சட்டையின்றி இருக்கும் அவர், "ஹே பொண்டாட்டி நான் கெட்டவன் இல்லடி.. கேடு கெட்டவன்" எனவும் கூறுகிறார். அதில் கேட்கும் பெண்ணின் குரல் விஜயலட்சுமியுடையது என கூறப்படுகிறது. பிரபலமான அரசியல் தலைவராக தற்போது விளங்கி வரும் சீமானின் இத்தகையக வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது. எனினும் இது வேகமாக வளர்ந்து வரும் சீமானின் புகழுக்கு களங்கம் கற்பிக்கவே பரப்படுவதாக நாம் தமிழர் தம்பிகள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் இருந்ததாகவும், பின் சீமான் தன்னை ஏமாற்றி விட்டார் என விஜயலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க: லீக் ஆன சீமானின் அந்தரங்க வீடியோ.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தம்பிகள்..!

தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான்..! 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கு பதிந்த காவல்துறை..!