அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால், அமைச்சர் ஜெயக்குமார், கட்சி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை வகையில் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் ஜெயக்குமார், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்துவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறியிருந்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டாரே தவிர சசிகலா பதவி வழங்கவில்லை என்று கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை  வெற்றிவேல் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ளார். அதில்,  டிடிவி தினகரன் குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இது தொடர்ந்தால் அவர் கட்சி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.