தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இன்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது துராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடி ஊழியர்கள் அந்த காரை வழிமறித்து சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால் அநத் வண்டிக்கு FASTAG   என்ற முறையில் இந்தியா முழுவதும் சென்று வர அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதை வேல் முருகனின் ஓட்டுநர் பாஸ்கரன் ஊழியர்களிடம் எனடுத்துச் செர்லிலியும் அதை கேட்கவில்லை. இதையடுத்து வேல் முருகன் காரில் இருந்து இறங்கி வந்து  கம்ப்யூட்டரில் செக் பண்ணி பார்க்க சொல்லியுள்ளார்.

அப்போது உண்மையிலேயே அந்த காருக்கு அனுமதி வாங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர். அப்போது அங்கிருந்த சில வடமாநில ஊழியர்கள் திடீரென அந்த காரை வழி மறித்து டிரைவர் பாஸ்கரை சரிமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து வேல் முருகன் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து பேட்டி அளித்த வேல்முருகன், வட மாநில ஊழியர்களை இங்கு வேலைக்க அமர்த்தியுள்ளதால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறி போவதுடன் மொழி பிரச்சனையும் ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பத தொடர்பாக சுங்கச் சாவடிகளில் வேல் முருகன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.