Vellore Sengutthavan and Dindigul Uthayakumar met Chief Minister Oommen Chandy.

டிடிவி அணியில் இருந்த 3 எம்.பிக்கள் நேற்று அணி மாறிய நிலையில், இன்று வேலூர் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரனுக்கும் எடப்பாடிக்கும் ஏகாப்பொருத்தம்தான். 

இதனால் டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சுடன் கைகோர்த்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி டீமை விட்டு சில எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வெளியேறினர். 

ஆனால் எடப்பாடி அணியே வெற்றி பெற்று இரட்டை இலையை கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். எடப்பாடி தரப்பில் இன்னும் யார் என்று முடிவாகவில்லை. 

இந்நிலையில், பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பிக்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இதைதொடர்ந்து இன்று டிடிவி தரப்பு எம்.பிக்களான மேலும் 2 பேர் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதாவது வேலூர் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.