வேலூர் மக்களவை தொகுதியில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார். 

மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். இதனிடையே வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் ஏ.சி. சண்முகம் கடந்த வாரம் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், எதிர்பார்த்தது போல எந்தப் பதிலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஏ.சி.சண்முகத்துக்கு வரவில்லை.

 

இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதில் கடந்த 26-ம் தேதி தேர்லின் போது வருமான வரித்துறையின் சோதனை ஒரு சார்பாக நடைபெற்றது. பல இடங்களில் பல வேட்பாளர்கள் ஆளுங்கட்சி சார்பாக பண விநியோகம் செய்வது குறித்து தகவல் இருந்தும் அதன் மீது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் வேலூரில் மட்டும் திமுக வேட்பாளர்தான் பண விநியோகம் செய்ததாக சோதனை என்ற பெயரால் ஒரு சூழலை உருவாக்கி தேர்தலை ரத்து செய்துள்ளனர். ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவது சரியாக இருக்காது.

 

ஒரு வாக்கின் காரணமாக அரசு தோற்றுபோன வரலாறும் உள்ளது. எனவே, ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை மே 19-ம் தேதிக்குள் உடனடியாக நடத்த வேண்டும் என்ற திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.