வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

 தமிழகத்தில் ஏற்கனவே 14 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 15-வதாக வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திட்டக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதி எம்.எல்.ஏ செங்குட்டுவன் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.