Asianet News TamilAsianet News Tamil

வேலூர் தொகுதி தேர்தல்... பொறுப்பை ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைத்த ஸ்டாலின்..!

வேலூர் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பை அக்கட்சியின் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகனிடம் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஒப்படைத்துள்ளார்.

vellore constituency...Stalin handed over the responsibility to Jagathrakshakan
Author
Tamil Nadu, First Published Jul 16, 2019, 10:56 AM IST

வேலூர் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பை அக்கட்சியின் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகனிடம் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஒப்படைத்துள்ளார்.

சென்னையில் நேற்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முழுக்க முழுக்க வேலூர் தொகுதி தேர்தல் குறித்து தான் பேசப்பட்டது. வேலூரில் மட்டும் திமுக ஜெயிக்கவில்லை என்றால் அடுத்த தேர்தலில் நமக்கு இறங்குமுகமாகிவிடும் என்பது தான் கூட்டத்தில் பேசிய அனைத்து திமுக புள்ளிகளின் பிரதானமான கருத்தாக இருந்தது. ஸ்டாலினும் கூட எப்பாடு பட்டேனும் வேலூரில் வென்றாக வேண்டும் என்று கூறியுள்ளார். 

 vellore constituency...Stalin handed over the responsibility to Jagathrakshakan

இதற்கிடையே கூட்டத்தை தொடர்ந்து ஜெகத்ரட்சகனிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகனை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியுள்ளார். எதற்காக இப்படி ஒரு ஏற்பாடு என்று விசாரித்த போது ஸ்டாலின் உஷாராகவே இந்த முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த முறை கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளின் வரவு செலவு கணக்கு துரைமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

 vellore constituency...Stalin handed over the responsibility to Jagathrakshakan

இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை துரைமுருகன் வீட்டிற்குள் புகுந்து அனைத்து விவரங்களையும் அள்ளிச் சென்றது. இதன் பிறகு திமுகவின் தேர்தல் வரவு செலவை ஜெகத்ரட்சகன் தான் பார்த்ததாக சொல்கிறார்கள். அதன் பிறகு எந்த பிரச்சனையும் எழவில்லை. இந்த நிலையில் வேலூரில் ஆளும் கட்சிக்கு நிகராக பணத்தை கொட்ட திமுகவும் தயாராக வருகிறது. அந்த வகையில் துரைமுருகனிடம் பணப் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க ஸ்டாலின் தயாராக இல்லை. vellore constituency...Stalin handed over the responsibility to Jagathrakshakan

இதனால் தான் ஜெகத்ரட்சகனிடம் அந்த பொறுப்பை ஸ்டாலின் முழுவதுமாக வழங்கிவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் கதிர் ஆனந்த் தனது செலவுக்கு தேவை என்றால் கூட ஜெகத்ரட்சகனிடம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திமுகவின் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கனவே வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளதால் துரைமுருகன் தன்னிடம் உள்ள பணத்தை வெளியே எடுக்க முடியாத சூழலில் உள்ளார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios