கடந்த மாதம் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், இம்மாதம் மீதமுள்ள நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன், தருமபுரியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வீரப்பன் மனைவி திமுகவிற்கு ஆதவாக இறங்கியுள்ளாராம்.

வாக்குசாவடிகளில் முறைகேடு நடந்ததாக, திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் , 13 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தர்மபுரி மக்களவை தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிபுதூர் ஆகிய 
வாக்குச்சாவடிகளில் மே 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே போல் இந்திய முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்து மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறுகிறது.

இந்நிலையில், வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி மற்றும் பாமகவின் முக்கிய தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரையும் சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் தர்மபுரி மாவட்டத்தில் மறுதேர்தல் நடைபெற உள்ள பகுதிகளான நத்தமேடு, ஜாலியூர் ஐய்யம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி  திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.  

ஏற்கனவே பல மகன் அன்புமணிக்கு எதிராக திமுகவில், டாக்டர் செந்திலுக்கு சீட் கொடுத்து தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த நிலையில், தற்போது எப்படியாவது அன்புமணியை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற முனைப்பில் காடுவெட்டி குரு குடும்பம், வேல்முருகன் என தொடர்ந்து வீரப்பன் மனைவியும் களமிறங்கியிருப்பது ராமதாசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.