மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டார். அப்போதைய சூழலும், பொதுப்புத்தியும் அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தன. ஆனாலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையனை 35 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்தது மனித உரிமை மீறல்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று கூறினால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். இவர் கடந்த 2004ம் ஆண்டு போலீசாரால் என்கவுன்ட்டர் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். வீரப்பனின் அண்ணன் மாதையன், பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், 1987-ம் ஆண்டு மாதையன் கைது செய்யப்பட்டார். பின்னர் கர்நாடகா போலீசாரும் மாதையனை வழக்கு ஒன்றில் கைது செய்தது. இவ்வழக்குகளில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாதையனுக்கு நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 35 ஆண்டுகளாக சிறையில் வாடிய வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன், அவரது உடல் நல பாதிப்புக்கு சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டார். அப்போதைய சூழலும், பொதுப்புத்தியும் அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தன. ஆனாலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையனை 35 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்தது மனித உரிமை மீறல்.
மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்... அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம் தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
