பெரும்பான்மைப் பலம் என்ற ஒன்றை வைத்து தங்களின் மனுதர்மச் சிந்தனையை அரங்கேற்றலாம் என்று திட்டமிடுகிறார்கள் - மக்கள் மன்றத்தைத் தயார்படுத்துவோம் - இந்த மனுவாதிக் கூட்டத்திற்குப் பாடம் புகட்டுவோம்; சமுகநீதி கட்சிகள் ஓரணியாகக் கைக்கோர்க்கட்டும் என்று  கி.வீரமணி கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட்' தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட்' தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக நெக்ஸ்ட்'  (NATIONAL EXIT TEST) அதாவது தேசிய நிறைவு நிலைத் தேர்வு'' என்ற பெயரில் புதிதாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதனால், எம்பிபிஎஸ் படிப்பு முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்குவதற் கான உரிமம் பெறுவதற்கு தனித் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும், தேசிய நிறைவு நிலைத் தேர்வு முடிவுகளே போது மானது என்றும், திருத்தப்பட்ட தேசிய மருத்துவ  ஆணைய மசோதாவில் ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இம்மசோதா விரைவில் மத்திய அமைச் சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெக்ஸ்ட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளா கத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந் தியபடி அவர்கள் முழக்கங்களை எழுப் பினர். திருச்சி சிவா, கனிமொழி, ஆ.இராசா, திருமாவளவன், சு.வெங்கடேசன், வசந்த குமார் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, தேசிய அளவிலான நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக எம்பி.,யான கனிமொழி நேற்று மக்களவை யில் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் திமுக,  அதிமுக. தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. பிளஸ் டூ தேர்வு முடிந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து நீட் பயிற்சி மய்யங்களில் சேர்ந்துதான் அத்தேர்வை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து நாடெங்கும் போராட் டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போல இன்னொரு தேர்வை நடத்துவது என்பது வீண் வேலை மட்டு மல்ல - முதல் தலைமுறையாகப் படித்துத் தப்பித் தவறி டாக்டர்களாகும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கீழே தள்ளும் கெட்ட எண்ணம் இதன் பின்னணியில் உள்ளது.

இவற்றிற்கான தேர்வுகள் நடத்தும் உரிமை தனியாருக்கு விடப்படுமாம். உயர்ஜாதி மனப்பான்மை ஒரு பக்கம் - கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைப்பது இன்னொரு பக்கம் - இந்த இரு அணுகுமுறைதான் பிஜேபி. ஆட்சியின் இரத்தவோட்டமாகும். 

பெரும்பான்மைப் பலம் என்ற ஒன்றை வைத்து தங்களின் மனுதர்மச் சிந்தனையை அரங்கேற்றலாம் என்று திட்டமிடுகிறார்கள் - மக்கள் மன்றத்தைத் தயார்படுத்துவோம்! இந்த மனுவாதிக் கூட்டத்திற்குப் பாடம் புகட்டுவோம்; சமுகநீதி கட்சிகள் ஓரணியாகக் கைக்கோர்க்கட்டும்! எனக் கூறியுள்ளார்.