Asianet News TamilAsianet News Tamil

தன்னை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்தனும்.! இல்லைனா, விஜயலட்சுமி குறித்த உண்மைகளை வெளியிடுவேன்- வீரலட்சுமி

நடிகை விஜயலட்சுமி தன்னை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிடில் விஜயலட்சுமி குறித்த உண்மைகளை சொல்ல நேரிடும் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார்.
 

Veeralakshmi has warned actress Vijayalakshmi to stop talking defamatory about her KAK
Author
First Published Oct 8, 2023, 3:26 PM IST | Last Updated Oct 8, 2023, 3:26 PM IST

சீமான்- விஜயலட்சுமி மோதல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்தார். தொடர்ந்தும் சமூக வலை தளத்தில் சீமானுக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தார். இந்தநிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் உடன் இருந்தார்.

மேலும் நடிகை விஜயலட்சுமியை தனது வீட்டில் வைத்து சட்ட போராட்டமும் நடத்தி வந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடரபாக சீமானை ஆஜராக போலீசார் சம்மன் அளித்திருந்தனர். அப்போது சீமானோடு சேர்ந்து அவரது மனைவியும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என வீரலட்சுமி கூறியிருந்தார்.

Veeralakshmi has warned actress Vijayalakshmi to stop talking defamatory about her KAK

எச்சரிக்கை விடுத்த வீரலட்சுமி

இந்த பரபரப்புக்கு மத்தியில் திடீரென சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீரலட்சுமி, விஜயலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி விஜயலட்சுமி பதிலடி கொடுத்தார். இந்தநிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள வீரலட்சுமி,  நடிகை விஜயலட்சுமிக்கு உதவ யாரும் முன்வராத சூழலில் தான் தான் முன்வந்து உதவியதாகவும்,

தன் சித்தப்பா இல்லத்தில் விஜயலட்சுமியை பாதுகாப்பாக தங்க வைத்ததாகவும், செய்த உதவியை நன்றி மறந்து தங்களை விஜயலட்சுமி விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார்.  இனியும் விஜயலட்சுமி தங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் விஜயலட்சுமி குறித்த உண்மைகளை சொல்ல நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆபாச பட நடிகையா.? என்னை பற்றி ரஜினிக்கு தெரியும்.. ஆதரவாக பேசியிருந்தால் சல்யூட் அடித்திருப்பேன்- நடிகை ரோஜா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios