கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கலைஞரின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கலைஞரை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது என்று மு.க.ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
கலைஞருக்கு 2 பிள்ளைகள் இருக்கும் போது மு.க.ஸ்டாலினுக்கு முன்னுரிமை அளிப்பது ஏற்புடையது அல்ல என அப்போதே வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- விரைவில் நீதிமன்ற கூண்டில் நிற்கபோகும் தயாநிதிமாறன்... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..!
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில்;- வீரபாண்டி ஆறுமுகம் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் எழுதியது எனக்கு தொடக்கத்திலிருந்தே தெரியும். அவருக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுவதற்கு காரணமே 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை தான். திமுகவில் மு.க.ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க தாம் புறக்கணிக்கப்படுவதாக அவர் உணர்ந்தார். இதனால் மு.க. அழகிரியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். அத்தகைய சூழலில் தான் 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- அமமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை தட்டி தூக்கிய எடப்பாடி... அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!
கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கலைஞரின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கலைஞரை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது என்று மு.க.ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 4, 2020, 12:49 PM IST