முன்னாள் எம்எல்ஏ குருநாதன் அமமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது டிடிவி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக டெபாசிட் வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, அமமுகவில் இருந்த முக்கிய நிர்வாகிகளான தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, புகழேந்தி உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இது டிடிவி.தினகரன் தரப்பிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறியதால் அமமுக உள்ளாட்சி தேர்தலுடன் கூடாராம் காலியாகிவிடும் என அதிமுகவினர் ஏலணமாக பேசி வந்தனர். யாரும் எதிர்பார்க்காத விதமாக உள்ளாட்சி தேர்தலில் அமமுக 15 சதவீதம் ஓட்டு வங்கி தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. மேலும், கடந்த சில மாதங்களாக அமமுக நிர்வாகிகள் கட்சி தாவல் இருந்து வந்தனர். 

இந்நிலையில், அமமுக செயலாளர் மற்றும் மாநில பேச்சாளரான பாளையங்கோட்டை முன்னாள் எம்எல்ஏ குருநாதன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து, முதல்வர் வரவேற்றார். தொடர்ந்து, சேலம் கொண்டலாம்பட்டி மற்றும் மேச்சேரி பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.