Asianet News TamilAsianet News Tamil

சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்... தொல். திருமாவளவன் அதிரடி அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் பரபரப்பில் ஈடுபட தயாராகிவருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திக்க ஆயத்தமாகிவருகின்றன. அதன் எதிரொலியாக திமுக  தலைவர் மு.க. ஸ்டாலினை விசிக தலைவர் தொல். திருமாவளவன், இ.கம்யூ. மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள்.
 
VCK will be dmk allinace till assembly election
Author
Chennai, First Published Nov 13, 2019, 9:16 AM IST

உள்ளாட்சித் தேர்தலை திமுக தலைமையில் எதிர்கொள்ள அதன் கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகிவருகின்றன.

VCK will be dmk allinace till assembly election
உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் பரபரப்பில் ஈடுபட தயாராகிவருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திக்க ஆயத்தமாகிவருகின்றன. அதன் எதிரொலியாக திமுக  தலைவர் மு.க. ஸ்டாலினை விசிக தலைவர் தொல். திருமாவளவன், இ.கம்யூ. மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள்.

VCK will be dmk allinace till assembly election
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் திமுக உள்ளது. திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தல் நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்வரும் தேர்தல்களைக் கூட்டணியோடுதான் விசிக எதிர்கொள்ளும்” என்று தெரிவித்தார்.VCK will be dmk allinace till assembly election
இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வாழ்த்து தெரிவித்தோம். வகுப்புவாத சக்திகள் தலைதூக்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் திமுகவின் தீர்மானங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து  நாங்கள் பேசவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமையில் ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios